You are hereBlogs / Saravana Perumal's blog / பிரநீஷ் சரணுக்கு மொட்டை

பிரநீஷ் சரணுக்கு மொட்டை


Saravana Perumal's picture

By Saravana Perumal - Posted on 19 January 2009

Pranesh Saran having his head tonsured while sitting on grandfather's lap

பிரநீஷ் சரணுக்கு காதுகுத்தி மொட்டையடிக்க எங்கள் குலதெய்வம் மொண்டிபாளையம் பெருமாள் கோயிலுக்கு போனோம்.சிறுமுகை மாமாவுக்கு முடி வெட்டுபவரை வைத்து பிரநிஷ்க்கு மொட்டையடித்தோம், அவர் அருமையாக மொட்டையடித்தார். மொட்டையடிக்கும் போது அமைதியாக தாத்தா மடியில் உட்கார்ந்திருந்தான். பின்னர் குளிப்பாட்டி காதுகுத்தினோம், காது குத்தும்போது நரம்பின்மீது படாதவண்ணம் கவனமாக செய்ய வேண்டும். அதை செய்தவரும் அருமையாக செய்தார், முன்றே நிமிடத்தில் இரண்டு காதையும் குத்தினார். காதுகுத்தும் போது சரியான அழுகை. காதாணியில் கூர்மையான தங்க ஊசியை பொருத்தி, காதின் சரியான பகுதியில் வைத்து அழுத்தினால்; காது ஓட்டை விழ உடன் காதாணியும் ஓட்டையில் மாட்டிவிடும். பிறகு அந்த ஊசியை கழற்றிவிட்டு திருகாணியை மாட்டிவிட வேண்டியது தான்.

Who's online

There are currently 0 users and 2 guests online.